ஒற்றைத் தண்டவாளம்

விலை : ரூ.80
ஆசிரியர் :ஆழ்வார்குறிச்சி ப சொக்கலிங்கம்
பகுதி : கவிதைகள்

படித்த, கேட்ட செய்திகளின் சிந்தனையில் கவிதையாக படைக்கப்பட்டுள்ள நுால். எண்ணங்களை கடத்தும் பணியை உடையது.

கட்டடம் கட்டிய பின், தொழிலாளி அதே வீட்டிற்குள் நுழைய முடியாததை, ‘விரட்டியடிப்பு’ கவிதை பேசுகிறது. எல்லா குல சாமிகளும் பூங்காவை கோவிலாக்கி என, பூங்கா மரப்பசுமையை இதமாக்குகிறது.

நேர நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் தர கற்றுக் கொடுக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை, கேள்வி கேட்கத் துாண்டுகிறது. ராட்டினக்காரரின் மூச்சிரைப்பை வலியுடன் உணர வைக்கிறது.

காணாமல் போன அம்மி துவையலை ருசிக்க தேடுகிறது. சருகுகள் உதிர்வது துாய்மை ஊழியர்களுக்கோ என்கிறது. உணர்வை காகிதத்தில் உலர்த்தி விடும் பேனாவை போற்றுகிறது. ஒவ்வொரு கவிதையிலும் அர்த்தம் பொதிந்துள்ளது.

வாசகர் கருத்து

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x