ஐம்புலன்

விலை : ரூ.80
ஆசிரியர் : ஆழ்வார்குறிச்சி ப சொக்கலிங்கம்
பகுதி : கவிதைகள்

முதல் குழந்தை, முதல் முத்தம் … போல ஒரு எழுத்தாளனுக்கு முதல் நூல். கடின உழைப்புடன் கவனித்து செதுக்கப்பட்டிருக்கும் அந்நூல். பின்னர் அதுவே பேசு பொருளாகி, அவன் மீது புகழ் வெளிச்சம் பாயத் தொடங்கியதும், எழுத்தாளன் அடுத்தடுத்த நூல்களை எழுதிட முதல் நூல்  அளவிற்கு உழைப்பையும் , திறனையும் பயன்படுத்துவானா என்பது கேள்விக் குறியே. ஆனால் தங்களின் மூன்றாவது படைப்பின் கவிதைகள் அனைத்தும் , “பஞ்சவர்ணக்கிளி ” கவிதைகளுக்கு நிகரான தரத்தையுடையவனவாகவும், தாக்கத்தை உருவாக்குபவையாகவும் இருக்கின்றன.  எல்லாக் கவிதைகளுமே  ரசிக்கத் தக்கவையாயிருந்தன. மதிப்புரையாளர்கள் குறிப்பிட்ட தையல், அஸ்திவாரம், காதலின் புன்னகை, நிலைக் கண்ணாடி, மனதின் பயணம், மரம், பூவரசமரம், பசி, ஜோசியக்கிளி …. மிகவும்  ரசிக்கத்தக்க வாயிருந்தன. இன்றைய காலச் சூழலை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய “தெளிவு” நான் மிகவும் விரும்பிய கவிதைகளில் ஒன்று. நூலைப் படித்து முடித்தவுடன் , தங்களின் அடுத்த படைப்பு வெளியீடு பற்றி  அறிந்திடும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. தாங்கள் அனுப்பிய நான்கு பிரதிகளில் ஒன்றினை நன்றியுடன்  எனதாக்கிக் கொண்டு,  மூன்று பிரதிகளை நமது பள்ளி நூலகத்தி ற்கு தங்களது அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளச் சொல்லியுள்ளேன்.

தங்களின் மனதிற் கினிய இலக்கியப் பணி தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டி ட வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்,
மு.சுந்தரம்
செயலாளர், ஸ்ரீ பரம கல்யாணி மேல் நிலைப் பள்ளி, ஆழ்வார்குறிச்சி

வாசகர் கருத்து

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x