“துடுப்பற்ற பட்டு
சேடும் இடம்
அறிந்த ஆறு”
ரசித்த வரிகள் இவை.
“சிலாகிக்கும். ஜன்னல்கள்
பூட்டிய வீடுகள்
புலப்பெயர்ச்சி″
இந்த ஹை கூவுக்கு வரைந்த வீடு
நம் ஆழ்வார்குறிச்சி வீடாகத் தெரியுதே
அப்படித்தானா? எல்லா கவிதைக்கும் பொருத்தமாகவும், முத்தாய்ப்பாக வீட்டையும் வரைந்து பிரபலப்படுத்திய நம் காந்திக்கு அன்பான வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
அவளிடம் பார் எங்கும் பட்டொளி வீசிப் பறக்குது. நம் சொக்கலிங்கத்தின் பெருமை அதை எண்ணி விம்முகிறது பெருமிதத்தால் நம் அன்பு நெஞ்சங்கள். அம்மா அவர்களின் நலன் அறிய ஆவல்.
மகனின் சுடர் விட்டு பிரகாசிக்கும் பெருமைகளை பார்க்கவில்லையே! அப்பா என்று எனக்குள் ஓர் ஆதங்கம்..
எழிலுக்கும் குழந்தைகளுக்கும் அன்பு. இன்னும் மேன்மேலும் சிறந்தோங்க ஆசிகள்.
வாழ்த்துகளுடனும், நன்றியுடனும்
அன்பு அத்தை
கு.சிவகாம சுந்தரி