அஞ்சறைப் பெட்டி

விலை : ரூ.160
ஆசிரியர் :ஆழ்வார்குறிச்சி ப சொக்கலிங்கம்
பகுதி : கவிதைகள்
ஒரு கதையோ கட்டுரையோ கவிதையோ, அதன் ஆரம்ப வரியே காட்சிங்காக அமைய வேண்டும். அப்படி அமைந்திருந்தால்த்தான் புத்தகத்தைக் கீழே வைக்காமல் வாசிப்பில் ஆழ்ந்து விடுவோம். அதே போல, முடிவு ஓர் அலாதியான ஃபினிஷிங் டச்சோடு இருந்தால், வாசகரின் மனசுக்குள் அந்த எழுத்து நுழைந்து ஜம்மென்று சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும். அருமைத் தம்பி திரு. ப. சொக்கலிங்கம் இந்த இரண்டு திறன்களையும் சிக்கெ னப் பிடித்துத் தம்வசப் படுத்தியிருக்கி றார். பஞ்ச வர்ணக் கிளியாகப் பல எழில் ஓவியங்களைத் தீட்டியவர் இப் போது அஞ்சறைப் பெட்டியைக் கொண்டு விருந்தும் மருந்தும வழங்கி யிருக்கிறார். சகோதரர் திரு. ஷ்யாம் பல சோறு பதம் பார்த்து விட்டார். அதனால் நான் அடக்கி வாசிக்கிறேன்.     

“அரக்கப் பரக்க உடற் பயிற்சி…” என்று பரபரப்பாக ஆரம்பித்து, “அடுத்த முறை பன்னீர் பட்டர் மசாலா…” என்று ஒரு போடு போடுகிறாரே, இனி “ஒரு ப.ப. மசாலா…” என்று ஆர்டர் பண்ண எனக்கு வாய் வருமா ? “அடவோலை ஆகக் கூடாது இதன் முடிவு” என்ற வரி தரும் உறுத்தலை உதறி விட இயலுமா ? சிவ சைல நடைப் பயணம்- மிகப் பிரமாதம் ! கொள்ளுப் பேரனைப் பெற்ற இந்தக் கிழவனின் நெஞ்சில் பேரன்/பேத்தி பெற இருக்கும் தம்பியின் காதல் நறுக்கு கள் ஒரு சுகமான ராகத்தை மீட்டுகின் றன. வாசிக்க ரசிக்கும் – யோசிக்க இனிக்கும் அழகான தொகுப்பு – வாழ்த்து கள் !   –
கி.ரா.திருமலையப்பன்.05.07.2021

வாசகர் கருத்து

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x