பேராசிரியர் திரு சிதம்பர குமாரசாமி அவர்கள் மூலமாகத் தாங்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு
கிடைக்கப் பெற்றேன்.
நல்ல புதுக்கவிதைகளைக் கொண்ட நூல்.
“ஊருக்கு வெளியே
சிதைந்த மேடை நடுவே
வயதான அரச மரம்”
– தொலைக்காட்சிப் பெட்டியால் நாம் தொலைத்த பாரம்பரியம்.
“நூடுல்ஸ்-ஸுக்கு ஜே !
தோசைத் துண்டுகள்
சம்பாரவை உப்புமா உருண்டைகள்”
– இவற்றுக்கு மட்டும் இடஒதுக்கீடு. இண்டு இடுக்குகள் !
“கோவக் கனவு குறட்டைகள்”- சுவாரசியமான அவதானிப்பு.
“தென்றலோடு நடனமாடும் சாரல் துளிகள்” – கண்ணுக்குத் தெரியாத காற்றையும்
ஸ்தூலமாக்கிய நுட்பமான கற்பனை !
ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் அல்வா. சூட்டினால் சுயநிறம் இழந்தாலும் சுவை கூட்டும் வாழை இலை.
பழைய ஞாபகம் மண்டுகிறது. பக்கத்தில் இருக்கும் போத்தி காஃபி கடையில் சூடாய் ஒரு கப் !
இந்த காம்போ- விற்கு உலகத்தையே எழுதிக் கொடுத்து விடலாமே !
நன்றி.
“வெற்றிவிடியல்” ஸ்ரீனிவாசன்