"கருவானிலொரு சிறு கீறல்
ஹைக்கூ கவிதைகள் ..
11.05.2025 அன்று
கொழும்புவில்
வெளியிடப்பட்டது.
இந்து தமிழ்திசை 31.05.2025
-என்.லிங்குசாமி
‘கருவானிலொரு சிறு கீறலை’ நம் கவிஞர் உருவாக்கினாலும், அதன் வழியே பேரின்ப அனுபவம் பெருக்கெடுத்து வழிகிறது. காதலையும் இயற்கையையும் ரசிக்காதவர்கள் கூட, கவிஞர் ப.சொக்கலிங்கத்தின் ஹைக்கூ கவிதைகளைக் கண்டால், சுகானுபவத்தில் சொக்கிப்போவார்கள்.-ஆரூர் தமிழ்நாடன்
தமிழில் ஹைக்கூ எனும் ராஜபாட்டையில் வலம்வரும் கவிஞர்களில் தனக்கென தனி மொழிநடையோடும், இயற்கை மீதான பெருநேசத்தோடும் எழுதிவரும் அன்புக்கவிஞர் ஆழ்வார்குறிச்சி சொக்கலிங்கம், தனது முதல் ஹைக்கூ நூலில் அன்பின் நீளத்தை அளந்தார். இந்த இரண்டாவது நூலில், கருவானிலிருக்கும் சிறு கீறலை’யும் மிக அழகாகப் பதிவுசெய்துள்ளார்.-மு.முருகேஷ்